ஹார்முஸ் நீரிணையை உடனே திறக்குமாறு ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவறும் பட்சத்தில் “நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்” என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் கருத்தை “முட்டாள்தனமானது” என வர்ணித்துள்ள ஈரானிய இராணுவ ஜெனரல் அலி அலியாபாடி, அமெரிக்கத் தலைவருக்கே நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி மிரட்டலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.