BREAKING NEWS

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். இதனால் இக்கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் மூடுபனி நிலவக்கூடும்.