சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகத் தமது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்து சபையும் (SLTB) புகையிரத திணைக்களமும் இணைந்து விசேட போக்குவரத்துச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
பேருந்து சேவை விபரம்:
ஏப்ரல் 09 முதல் 13 வரை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான விசேட சேவைகள்.
ஏப்ரல் 17 முதல் 21 வரை மீண்டும் கொழும்பிற்கு வருபவர்களுக்கான சேவைகள்.
நாளாந்தம் மேலதிகமாக 250 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
புகையிரத சேவை விபரம்:
ஏப்ரல் 10 முதல் விசேட புகையிரத சேவைகள் ஆரம்பம்.
கரையோர, வடக்கு மற்றும் பிரதான பாதைகளில் வழமையான சேவைகளுடன் விசேட புகையிரதங்களும் இயக்கப்படும்.