ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (ஏப்ரல் 07) நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். அரசாங்கத்தின் புதிய பொருளாதாரப் பொதியினை (Economic Package) நாட்டுக்கு அறிவிக்கும் நோக்கிலேயே அவர் இந்த வருகையினை மேற்கொள்கிறார் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்ட முக்கிய அறிவிப்புகள் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.