ஈரான் மற்றும் அதன் அரசியல் எதிர்காலம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்று இரவு அமையக்கூடும் என அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானில் சுமார் 47 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் “அராஜகம் மற்றும் ஊழல்” நிறைந்த ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வரக்கூடும் என்றும், அது புதியதொரு விடியலுக்கு வழிவகுக்கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“ஒரு முழு நாகரிகமே இன்று இரவு அழியக்கூடும். இது மீண்டும் மீட்டெடுக்க முடியாததாகிவிடும். நான் இதை விரும்பவில்லை, ஆனால் இது நிகழக்கூடும்” என ட்ரம்ப் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் ஏற்படும் மாற்றங்கள், தற்போதைய தீவிரவாதப் போக்கைக் கடந்து, மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் முற்போக்கான தலைமையைக் கொண்டுவரும் என தாம் கருதுவதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானின் நீண்டகால வரலாற்றில் இன்றைய இரவு மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இறுதியாக “ஈரானின் சிறந்த மக்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும்!” என்று தனது பதிவை முடித்துள்ளார்.