மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (08) மதியம் 1.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாண கரையோரங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை மழை பெய்யலாம்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.