ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சுற்று போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிராக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்தார்.
202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தோடிய ராஜஸ்தான் அணிக்கு, 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் சூர்யவன்ஷி அதிரடி காட்டியதால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது.
இந்த அதிரடியின் மூலம் 4 போட்டிகளில் 200 ஓட்டங்களைக் கடந்து, அதிக ஓட்டங்கள் எடுத்த வீரருக்கான ‘ஆரஞ்சு தொப்பியை’ சூர்யவன்ஷி கைப்பற்றினார்.
போட்டிக்குப் பின் விராட் கோலி சூர்யவன்ஷியைப் பாராட்டியதுடன், அவரது தொப்பியில் “Dear Vaibhav, well done” என ஆட்டோகிராப் போட்டு வாழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.