BREAKING NEWS

நிலக்கரி ஊழல்: 2009 முதல் நடந்த ‘சுருட்டல்’ குறித்து CID விசாரணை!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
நிலக்கரி ஊழல்: 2009 முதல் நடந்த ‘சுருட்டல்’ குறித்து CID விசாரணை!

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் குறித்து, 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான கொடுக்கல் வாங்கல்கள் மீது முறையான விசாரணையை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (ஏப்ரல் 11) முற்பகல் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே இந்த விசாரணை ஆரம்பமாகியுள்ளது.