BREAKING NEWS

பிரசன்ன ரணவீரவிற்கு செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
பிரசன்ன ரணவீரவிற்கு செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடையாது நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.

கடந்த மே மாதம் 07 ஆம் திகதி பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.