காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வாரத்தில் அனைத்து நாள்களும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் வெளியிட்டுள்ளார்.கடந்த காலத்தில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாள்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தினமும் கப்பல் சேவை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.www.sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
05 Oct 2025 | 9:34 AM
38 views
காங்கேசன்துறை -நாகபட்டினம் கப்பல் சேவை நாளாந்தம்
BI
biruntha biruntha
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM