BREAKING NEWS

வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள்

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.