BREAKING NEWS

மஸ்கெலியா தொழிற்சாலையில் தீ விபத்து

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
மஸ்கெலியா தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், தொழிற்சாலை முற்றாக தீக்கிரயைாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதண்ணீர் பொலிஸ் அதிரடி படையினர் முன் வந்த போதும் தீயை அணைக்க முடியவில்லை தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.