பண்டாரவளையில், அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட “BLACK TEA” என்ற கறுப்பு தேயிலை உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அதன்படி, 1 கிலோகிராம் “BLACK TEA” இலங்கை பெறுமதியில் சுமார் 255,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஜப்பான் ஒசாகா நகரில், நடைபெற்ற விசேட நிகழ்ச்சியொன்றின் போது, இலங்கை தேயிலை முதல் நிலை பெற்று சாதனை படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக, கின்னஸ் சாதனை சான்றிதழும் இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இன்று 567 தேயிலை தொழிற்சாலைகள் இலங்கையில் இயங்குவதாகவும், சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார். டன்
10 Oct 2025 | 2:32 PM
13 views
உலக சந்தையில் இலங்கையின் தேயிலை அதிக விலைக்கு விற்பனை
MI
Mithu Mithu
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM