வர்த்தமானி வெளியீடு – அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் மாற்றம்
பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் மாற்றம் செய்யப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாற்றம், அரசாங்கத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
அந்தத் திருத்தங்களின் அடிப்படையில்,
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை நீக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வுப் பணியகமும் இனி அந்த அமைச்சின் பொறுப்பில் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அமைப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான முழுமையான விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வர்த்தமானி வழியாக வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Oct 2025 | 8:03 AM
10 views
புதிய வர்த்தமானி வெளியீடு! அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் முக்கிய மாற்றம்
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM