ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையிலும் இறக்குமதி வாகன விலை அதிகபட்சம் ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில் குவிந்துள்ளன, இதனால் விற்பனை மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை தனிப்பட்ட வாகன இறக்குமதிக்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
விலை மாற்றங்களின் அடிப்படையில்,
Honda Vezel Z Play 2025 SUV தற்போது ரூ.23.5 மில்லியனாகவும்,
Toyota Yaris ரூ.10.5 மில்லியனாகவும்,
Suzuki Alto Hybrid மற்றும் Wagon R மொடல்கள் ரூ.7.3 மில்லியனாகவும் குறைந்துள்ளன.
இதேவேளை, Toyota தற்போது இலங்கையின் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது.
Raize மற்றும் Yaris மொடல்கள் அதிக விற்பனையில் முன்னிலையில் உள்ளன.
சிறிய வாகன பிரிவில் Nissan விற்பனை அதிகரித்துள்ளதுடன், புதிய பதிப்புகள் இல்லாததால் Suzuki Wagon R விற்பனை குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2025 | 6:33 AM
11 views
இலங்கையில் இறக்குமதி வாகன விலை வீழ்ச்சி – வாகன பிரியர்களுக்கு மகிழ்ச்சி!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM