BREAKING NEWS

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களுக்கு வந்த சோதனை : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

MI
mithu mithu in Latest Updates
Report
AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களுக்கு வந்த சோதனை : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்
மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது.

நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, வருடக் கணக்கில் பணியாற்றி வந்தவர்களை பணிநீக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.