இணைய உள்ளடக்க உருவாக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், சீன அரசு புதிய விதியை அறிவித்துள்ளது. இனி சமூக ஊடகங்களில் மருத்துவம், சட்டம், கல்வி அல்லது நிதி போன்ற “முக்கிய” தலைப்புகளில் பேச விரும்பும் இன்ஃப்ளூயன்சர்கள் (influencers) தங்கள் அதிகாரப்பூர்வ தகுதிகளை நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஒக்டோபர் 25 முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதிமுறையின் படி, அந்தந்த துறைகளில் பட்டம், தொழில்முறை அனுமதி (license) அல்லது சான்றிதழ் போன்ற சான்றுகள் இல்லாமல் இத்தகைய தலைப்புகளில் பதிவுகள் இட முடியாது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் Cyberspace Administration of China (CAC) தெரிவித்ததாவது, இந்த விதி தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களை தவறான ஆலோசனைகளிலிருந்து பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி Douyin (சீனாவின் TikTok), Bilibili, Weibo போன்ற தளங்கள் இன்ஃப்ளூயன்சர்களின் தகுதிகளை சரிபார்க்கும் பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது.
மேலும், பதிவுகளில் பயன்படுத்தப்படும் தகவல்கள் எந்த ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டவை என்பதை தெளிவாக குறிப்பிடவும், AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதையும் வெளிப்படையாக சொல்லவும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மருந்துகள், சத்துணவு பொருட்கள் அல்லது ஆரோக்கியச் சப்ளிமென்ட்கள் தொடர்பான விளம்பரங்கள் கல்வி நோக்கில் காட்டப்படும் பெயரில் வெளியிடப்படுவதும் இனி தடை செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2025 | 3:04 PM
13 views
சீனாவில் புதிய விதி: மருத்துவம், சட்டம், கல்வி, நிதி போன்ற தலைப்புகளில் பேச ‘தகுதி’ அவசியம்
MI
mithu mithu
in உலகம்
தொடர்புடைய செய்திகள்
உலகம்
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!
03 Apr 2026 · 7:54 AM