BREAKING NEWS

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்த பெண் கண்டி, ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், மின்சார ஹீட்டரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.