மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஜேகப் எல். ஜெரோஷன் இயக்கிய குறும்படமான “நீளும் ஓர் கடைசி இரவு” (The Last Endless Night) இந்தியாவின் மிகப் பிரபலமான சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான Dharamshala International Film Festival (DIFF) 2025-இல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவாகியுள்ளது.

இந்த குறும்படம் மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டதுடன், அங்குள்ள இளம் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பில் உருவானது.

படம் சமூக நிஜங்களை மையமாகக் கொண்ட ஆழமான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சியமைப்புக்காக கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்ஷாலாவில் (Dharamshala) ஆண்டு தோறும் நடைபெறும் DIFF விழா, இந்திய சினிமா உலகின் முக்கிய சுயாதீன திரைப்பட மேடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் திரைவிழா 2025 அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெற்றது.

இதில் “நீளும் ஓர் கடைசி இரவு” நவம்பர் 2 அன்று திரையிடப்பட்டது.

இத்திரைப்படம் தேர்வாகியது மட்டக்களப்பின் இளம் படைப்பாளிகளுக்கான ஒரு பெருமையான சாதனையாகும்.

மேலும் இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து உருவாகும் புதிய சினிமா குரல்களுக்கு இது ஒரு வலுவான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

இலங்கை சினிமா