லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் (Wandsworth) சிறையிலிருந்து 24 வயது அல்ஜீரிய நபர் ஒருவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 29ஆம் திகதி அந்த கைதி விடுவிக்கப்பட்டதை, நேற்றைய தினம் சிறை நிர்வாகம் தான் “தவறுதலாக விடுவிக்கப்பட்டார்” என்று தெரிவித்தது.
துணைப் பிரதமர் டேவிட் லாம்மியிடம் கடந்த மாதம் நடந்த ஹதுஷ் கெபாட்டுவின் (Hadush Kebatu) சம்பவத்துக்குப் பிறகு வேறு தஞ்சம் தேடுபவர்கள் தவறுதலாக விடுவிக்கப்பட்டார்களா என்று எதிர்க்கட்சியின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் கார்ட்லிட்ஜ், அந்நாட்டு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த செய்தி வெளியாகியது.
லாம்மி இதற்கு நேரடி பதில் அளிக்காமல், டேம் லின் ஓவன்ஸ் தலைமையில் இதுகுறித்து ஒரு ஆய்வு நடைபெறுவதாகவும், கெபாட்டு சம்பவத்திற்குப் பிறகு “சிறைவிடுதலையில் இதுவரையிலேயே கடுமையான சோதனை முறைகள்” அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த கெபாட்டு, எப்பிங்கில் பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றிருந்தார்.
தவறுதலாக செல்ம்ஸ்ஃபோர்த் (Chelmsford) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டு, தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
05 Nov 2025 | 1:36 PM
11 views
சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட 24 வயது அல்ஜீரிய நபர்
MI
mithu mithu
in உலகம்
தொடர்புடைய செய்திகள்
உலகம்
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!
03 Apr 2026 · 7:54 AM