“கண் தான முகாம்” ஒன்று மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு
தம் சுயவிருப்பத்துடன் கண்களை தானம் செய்ய பலர் முன் வந்திருந்தனர்.

பலரது அறிவுக் கண்களை திறக்கும் பாடசாலையினூடாக ஓர் மனிதனின் மறைவின் பின்னாலும் அவன் கண்கள் அடுத்தவர்களின் பார்வைக்கு வழிகாட்டக் கூடிய ஓர் விழிப்புணர்வு நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது.

மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினுடைய இச்செயற்பாட்டை பல்வேறு துறையினரும் பாராட்டுவதுப்போல் இலங்கையின் கலை, கலாசார, சமூக சேவைகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வரும் கண்ணகி கலாலயம் மற்றும் தேசிய கலை அரண் கலைஞர்களும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள்.
அவர்களோடு எமது *விழித்திரை* ஊடகமும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது..

நாளைய உலகை சி(ச)ந்திக்கும் விழிகள்..

இலங்கை சினிமா