2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பாதீட்டு உரை) நாளை (07) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
குழு நிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி தொடங்கி 17 நாட்கள் இடம்பெறும்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
06 Nov 2025 | 8:52 AM
17 views
2026ம் ஆண்டிற்கான பாதீடு : நாளை நாடாளுமன்றத்தில்
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்