மட்டக்களப்பில் உருவான அதிரடி திரில்லர் “அம்மு” திரைப்படம் – தாழங்குடாவில் PCA திரையரங்கத்தில் 2025.11.15.மாலை 5.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது!
டி கே கண்ணன் அவர்களது கதை திரைக்கதையிலும் ஆர்.ஜே. நெலு இயக்கத்திலும் உருவாகியுள்ள “அம்மு (A Father’s Anguish)” திரைப்படம், தந்தையின் வேதனை மையமாகக் கொண்ட அதிரடி சோஷியல்-திரில்லர் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கர்ஜனின் இசை தினு மகேந்திரனின் படத்தொகுப்பு மற்றும் ஆர்.ஜே. நெலு இனது ஒளிப்பதிவு என
தென் இந்திய சினிமாவுக்கு நிகராக தரமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மட்டக்களப்பின் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்.
வெளியீட்டில் கலந்துகொண்டு குறைநிரைகளை பகிர்ந்து எதிர்கால படைப்புகளுக்கு அந்த கலைஞர்களை ஊக்குவிக்குமாறு மட்டக்களப்பு வாழ் ரசிகர்களை படக்குழு கேட்டுக்கொள்கிறது.
வாருங்கள் கண்டு களிப்போம்.