இந்திய தலைநகர் புதுடெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு இடம்பெற்ற கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 9 பேர் பலியானதாக இந்தியாவின் சில ஊடகங்களும் 13 பேர் இறந்ததாகத் தமிழகத்தை மையப்படுத்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காஷ்மீர் – பரிதாபத்தில் இரண்டாயிரத்து 900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையிலேயே டெல்லியிலும் கார் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Nov 2025 | 6:09 AM
8 views
டெல்லி வெடிப்பு சம்பவம் – தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் : சந்தேகம்
MI
mithu mithu
in உலகம்
தொடர்புடைய செய்திகள்
உலகம்
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!
03 Apr 2026 · 7:54 AM