இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 625 BYD ரக வாகனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்தந்த வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களுக்கு உட்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கீல்ஸ் சிஜி ஒட்டோ (பிரைவேட்) லிமிடட் (John Keells CG Auto (Pvt) Ltd) தாக்கல் செய்த பல ரிட் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த மனுக்கள் தற்போது சுங்கத் திணைக்களத்திடம் உள்ள சில BYD வாகன மாதிரிகளின் மோட்டார் திறன் தொடர்பான சர்ச்சையுடன் தொடர்புடையது.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுமதி தர்மவர்தன, சுங்க திணைக்களம் கீழ்க்கண்டவாறு வாகனங்களை விடுவிக்கச் சம்மதித்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதன்படி BYD Atto 2 Premium – 70kw, BYD Atto 1 Dynamic – 45kw, BYD Atto 1 Premium – 45kw, BYD Dolphin Dynamic – 70kw மற்றும் BYD Dolphin Standard – 49kw மற்றும் BYD Sealion 7 – 100kw ஆகிய மொடல்களை வங்கிக் காப்புறுதிகளின் அடிப்படையில் விடுவிக்கவும் சுங்கத் திணைக்களம் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில், நீதிமன்ற உத்தரவின்படி, 130 BYD Atto 1 Dynamic மற்றும் 74 BYD Atto 1 Premium வாகனங்கள் நிறுவன உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட உள்ளன.

மேலும், 232 BYD Dolphin Standard–49kw மற்றும் 3 BYD Sealion 7–100kw வாகனங்கள் வங்கி உத்தரவாதங்களின் பேரில் விடுவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், 6 BYD வாகனங்கள் அவற்றின் மோட்டார் திறனைச் சோதிக்க வசதியாகச் சுங்கக் காவலில் இருக்கும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பர்சானா ஜமீல், வாகனங்களை விடுவிக்க உத்தரவிடுமாறும், வழக்கு நடவடிக்கைகளின் பிரதிகளை மனுதாரர்களுக்கு வழங்குமாறும் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒப்புக்கொள்ளப்பட்ட உத்தரவாதங்களுக்கு ஏற்ப, இலங்கை சுங்கத் திணைக்களம் வாகனங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

இலங்கை சினிமா