மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகங்களில் சில, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் இன்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்டதில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளது.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதி, வங்கிக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த உணவகங்கள் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீதும் பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 Nov 2025 | 12:53 PM
16 views
மன்னாரில் சுகாதார சீரற்ற உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM