BREAKING NEWS

வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் – பொலிஸார்

BI
biruntha biruntha in முக்கிய செய்திகள்
Report
வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் – பொலிஸார்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியாக்கள் பற்றி கருத்துக்களை வெளியிட்டார்.

வடக்கில் கடந்த ஏழு மாதங்களாக கல்வி நிலை மேம்பட்டுள்ளது எனச் சொன்னீர்கள். இதனை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துங்கள். வடக்கில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள்.

எனவே, வடக்கிலிருந்து இராணுவத்தினர் எப்போது வெளியேற்றப்படுவார்கள்?” – என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், “போதைப்பொருளுக்கு பின்னால் இராணுவமும் பொலிஸும் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினீர்கள். அதில் உண்மை உள்ளது.

ஆனால், இராணுவத்தினரும் பொலிஸாரும் வேறாக இல்லை. அங்குள்ள மாபியாக்களுடன் அவர்கள் இணைந்துள்ளனர். அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர்.