BREAKING NEWS

மலையக பிரதிநிதிகளின் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
மலையக பிரதிநிதிகளின் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

இதேவேளை பாதீட்டு வாக்கெடுப்பில் 8 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அதன்படி பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

எனினும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்டவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பை கருத்தில் கொண்டு பாதீட்டுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பாதீட்டுக்கு ஆதரவளித்தார்.