BREAKING NEWS

உரிய விலை நீர்ணயிக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகும் விவசாயிகள்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
உரிய விலை நீர்ணயிக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகும் விவசாயிகள்

உள்ளூர் பெரிய வெங்காயத்துக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படாத நிலையில், தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 155 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை, பூசணிக்காய் பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், பூசணிக்காய்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.