BREAKING NEWS

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை வழங்கினார்- சஜித் பதிலடி

BI
biruntha biruntha in அரசியல்
Report
மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை வழங்கினார்- சஜித் பதிலடி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார்.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் வந்த ஆலோசனைகள் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.“பெருந்தோட்ட மக்களைப் பற்றி உங்களிடம் இருந்து எங்களுக்கு ஆலோசனை தேவையில்லை.

மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்தது என் தந்தை ரணசிங்க பிரேமதாசதான் என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்று சஜித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் விரிவான பதில்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.