BREAKING NEWS

இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

PR
priya priya punidha in Latest Updates
Report
இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.

நாங்கள் கட்டாயமாக பேரணியில் பங்கேற்கப் போவதில்லை.

கட்சி என்ற ரீதியல் அதுதொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், கட்சியின் தலைமை இதுபற்றி தமக்கு எதுவும் அறிவிக்கவில்லை என அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேரணியில் கலந்துகொள்ளத் தேவையில்லை என கட்சியின் மத்திய செயற்குழு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் செயற்படும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்திருக்கிறார்.

மொட்டுக் கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, “ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச மட்ட அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் பேரணியில் கலந்துகொள்வார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேடம் போடுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.