இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய மதிப்பில் ரூபாய் 69 இலட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக கரையோர பொலிசார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது இந்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை சினிமா