BREAKING NEWS

ஜனாதிபதியின் புதிய சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
ஜனாதிபதியின் புதிய சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சுரசேன தலைமையிலான உயர் நீதிமன்றில் இந்தச் சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான சுதர்ஷன டி சில்வா, அசாத் நவாவி, ஹிரஞ்சன் பீரிஸ் மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த நான்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களும் அண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி பதவிக்கு பெயரிடப்பட்டிருந்தனர்.