கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து அங்கு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் வியாபாரத் தளங்கள் பாதிப்படைந்தன. இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெக்கோ வாகனங்கள் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், நோயாளர் காவு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை சினிமா