சிறிது காலமாக முட்டை திருட்டிய நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்தெரிவித்தனர்.
முன்னதாக, வெலிவேரிய நகரில் உள்ள ஒரு முட்டை விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து முட்டைகள் திருடப்பட்டதாக வெலிவேரிய பொலிசாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டன.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இரவு வேளைகளில் முச்சக்கர வண்டியில் வந்து திருட்டில் ஈடுபடுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிசாரால் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
22 Nov 2025 | 11:36 AM
9 views
முட்டை திருட்டுடன் சம்பந்தப்பட்டவர் ஹெரோயினுடன் கைது
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM