BREAKING NEWS

பசியால் வாடும் சூடான் மக்கள் : ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பலி

MI
mithu mithu in உலகம்
Report
பசியால் வாடும் சூடான் மக்கள் : ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பலி
சூடானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போரால் இந்த நிலை உருவாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல் நிலவியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கிளர்ச்சி உள்நாட்டுப் போராக உருமாறியது.

இந்த உள்நாட்டுப் போரால் சுமார் 1.5 கோடி பேர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமையால் குழந்தைகள், முதியவர்கள் ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் இறந்ததாக சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.