தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபை தவிசாளர் எம்.ஜி.துஷார சம்பத்தினால் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (24) திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்ட நிலையில் 4 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.
சேருவில பிரதேச சபையின் 16 மொத்த உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் மாத்திரமே இன்றைய பாதீட்டுக்கு சமூகமளித்திருந்தனர்.
சர்வஜன பலய கட்சியின் உறுப்பினர் சபை அமர்வுக்கு வருகை தரவில்லை. அதேபோன்று இன்றைய அமர்வுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கண்டுகொள்ளாத நடுநிலைமையை வகித்தார்.
இந்த நிலையில், வாக்களிப்பில் கலந்து கொண்ட 14 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும் 05 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசி கட்சிகளின் ஆகிய உறுப்பினர்கள் பாதிட்டுக்கு ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் போராட்ட முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பாதிட்டுக்கு எதிராகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
24 Nov 2025 | 3:59 PM
11 views
சேருவில பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM