மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற போது, அவரது வருகையை கண்டித்து பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெம்ப்லி பகுதியில் உள்ள அல்பர்டன் உயர்தர பாடசாலையில், 1987-1989ஆம் ஆண்டுகளில் JVP கிளர்ச்சியில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நிகழ்வில் பங்கேற்க வந்த சில்வாவின் வாகனத்தை, போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
“இலங்கை அரசு – பயங்கரவாத அரசு!”, “இன அழிப்பு நிறுத்தப்படவேண்டும்!” என முழக்கமிட்ட தமிழர்கள், சில்வாவின் வருகைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
JVP, 2002ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்ததோடு, தமிழர்களுக்கு எதிரான படையெடுப்பை ஆதரித்து 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்ததமையே இந்த எதிர்ப்புக்கு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.