ஐக்கிய தேசியக் கட்சியையும் (ஐ.தே.க.) ஐக்கிய மக்கள் சக்தியையும் (ஐ.ம.ச.) ஒன்றிணைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ள முடிவை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்காக சஜித் பிரேமதாச தனிப்பட்ட ரீதியில் முன்வந்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தமது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.
பேச்சுவார்த்தைக்கு மூவர் குழு நியமனம்:
ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரும் முக்கியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர்:
- பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன
- பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துகோரல
- தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க
இந்த இணைப்பு தொடர்பான அனைத்துக் கலந்துரையாடல்களும் மேற்கண்ட மூவர் கொண்ட குழுவினாலேயே முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.