பதுளை:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பதுளை மாவட்டச் செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

போக்குவரத்து மாற்றம்:

இதனிடையே, பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் அமைந்துள்ள தல்தேன, புசல்ல ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால் வீதிப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை சினிமா