இந்த கடுமையான நேரத்தில் 100 மிமீக்கு மேல் கனமழை, மணிக்கு 60-90 கிமீ வேகத்தில் பலத்த காற்று, மரங்கள் விழுதல், மின்கம்பங்கள் சேதம், வெள்ள அபாயம் மற்றும் கடற்பகுதியில் 3-4 மீட்டர் உயர அலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இந்த அனர்த்த காலப்பகுதியில் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும், குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு ஆபத்து இருப்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும் மற்றும் மின்கம்பிகள், மரங்களுக்கு அருகில் இருந்து தூரமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவசர உதவிக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவும்.