டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட 30 சிரேஷ்ட இராஜதந்திரிகள் மீள அழைப்பு!
தற்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட சுமார் 30 சிரேஷ்ட இராஜதந்திரிகளை (Career Diplomats) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறைந்தது 29 நாடுகளில் பணியாற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட தூதரகத் தலைவர்களுக்கு, அவர்களின் சேவைக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நியமனம் பெற்றவர்களாவர். டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமான போது, அரசியல் நியமனம் பெற்றவர்கள் நீக்கப்பட்ட வேளையில், இந்த இராஜதந்திரிகள் தமது பதவிகளில் நீடிக்க முடிந்தது.

எனினும், கடந்த புதன்கிழமை முதல் வொஷிங்டன் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இராஜதந்திரிகளுக்கு இந்த பதவி நீக்கம் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை சினிமா