BREAKING NEWS

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர்கள் 6 பேர் கைது

SR
sritharan sri in Latest Updates
Report
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர்கள் 6 பேர் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிசுட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.