இலங்கையில் சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
அதன்படி, நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
மனிதாபிமான உதவி
அத்துடன் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது.
சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குகிறது. அதேநேரம், பல குடும்பங்கள் உணவைக் குறைப்பது போன்ற உத்திகளை நாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.