இலங்கை விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை (Search and Rescue) வலுப்படுத்துவதற்காக, 10 நவீன ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது ‘X’ தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான TH-57 (Bell 206 Sea Ranger) வகை ஹெலிகாப்டர்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவின் ‘உபரிக் பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
முக்கிய விபரங்கள்:
செலவு: இந்த ஹெலிகாப்டர்களுக்காக இலங்கை எவ்வித கொடுப்பனவுகளையும் செலுத்த வேண்டியதில்லை.
நோக்கம்: அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwa) சூறாவளி போன்ற அனர்த்தங்களின் போது மீட்புப் பணிகளில் ஏற்பட்ட தடைகளைக் கருத்திற் கொண்டு, விமானப்படையின் திறனை மேம்படுத்துவதற்காக இவை வழங்கப்படுகின்றன.
வருகை: இந்த 10 ஹெலிகாப்டர்களும் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் (பெப்ரவரி மாதம் அளவில் முதலாவது தொகுதி) இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விமானப்படையின் விமானிகளின் பயிற்சிகளுக்கும், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.