BREAKING NEWS

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு.

PR
priya priya punidha in அரசியல்
Report
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (09) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கல்வி மறுசீரமைப்புடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய 6-ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுப்பு (English Module) தொடர்பாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கான கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமானது.
தற்போதைய தகவல்களின்படி, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.