இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மட்டக்குளி (மோதுரை) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 1 கிலோ 160 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ கிராம் 160 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 2026.01.19 (நேற்று) இரவு 20:30 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘ரந்திய உயன’ அடுக்குமாடி குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 30 வயதுடைய கோபால் சசிதரன் என்ற நபரே இவ்வாறு 1 கிலோ 160 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சினிமா