நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், கொழும்பு பத்திரிகையாளர்கள் சங்கம் (CJA) நான்காவது முறையாக ஏற்பாடு செய்துள்ள “சுஹாதா மென்பந்து கிரிக்கெட் போட்டி மற்றும் சுஹாதா சந்திப்பு – 2026”, எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்னணு ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களைக் கொண்டு சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான கொழும்பு பத்திரிகையாளர்கள் சங்கம், இந்த மெகா கிரிக்கெட் திருவிழாவை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள அங்கம்பிட்டிய மைதானத்தில் நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பொதுமக்களின் தகவல் அறியும் உரிமைக்காக வருடத்தில் 365 நாட்களும் அயராது உழைக்கும் ஊடகவியலாளர்களின் நலன்புரி மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசேட அதிதிகள்: இந்த விழாவின் ஆரம்ப நிகழ்வு கௌரவப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

போட்டியிடும் அணிகள்: இத்தொடரில் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய பின்வரும் 06 பலப்பரீட்சை நடத்தவுள்ளன:

1.கொழும்பு லயன்ஸ் (Colombo Lions)

2.கொழும்பு ஈகிள்ஸ் (Colombo Eagles)

3.கொழும்பு ரைடர்ஸ் (Colombo Riders)

4.கொழும்பு ராயல்ஸ் (Colombo Royals)

5.கொழும்பு ஸ்டாலியன்ஸ் (Colombo Stallions)

6.கொழும்பு ரேஞ்சர்ஸ் (Colombo Rangers)

வெற்றிச் சின்னம் வழங்கும் இறுதி நிகழ்வில் நாட்டின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அனுசரணை நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளனர்.

இலங்கை சினிமா