BREAKING NEWS

ரஷ்யாவை உரையவைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு.

PR
priya priya punidha in Latest Updates
Report
ரஷ்யாவை உரையவைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு.

சுமார் ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றைத் தகர்த்தெறிந்து, ரஷ்யாவை உரைய வைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு. 

இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனால் தலைநகர் மொஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 

அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை உயர்ந்துள்ளன. 

நான்கு மாடி உயரமுள்ள கட்டிடங்கள் கூட பனிக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மின்சாரம் இன்றி, போக்குவரத்து முடங்கி, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு அந்தத் தீபகற்பமே தனித்துவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு அவசர கால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.