நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை நாளை (23) முதல் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறட்சியான வானிலை தொடரும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நிலவும் கடும் குளிருடனான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி (Ground Frost) உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உறைபனி நிலவும் காலங்களில் மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டும்போது வழுக்கும் அபாயம் இருப்பதால், போக்குவரத்து ஒழுங்குமுறைகளைப் பேணுமாறு அந்தந்தப் பகுதி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கை சினிமா